
பேரழிவு காலத்தில் வெளியிடப்பட்ட அவசர கால விதிமுறைகளும் ஊடகங்கள்-சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதலும்
மோசமான வானிலை நிலைமைகள் காரணமாக 2025 நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இல. 2664/30 மூலம் அதிமேதகு ஜனாதிபதியால் இலங்கை முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த பிரகடனத்துடன் ஜனாதிபதிக்கு அவசரகால விதிமுறைகளை விதிக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதி 2025 நவம்பர் 28 அன்று அதிவிசேட வர்த்தமானி இல. 2464.31 மூலம் அவசரகால (பலதரப்பட்ட ஏற்பாடுகள்







